Home உலகம் அமெரிக்க மாநிலத்தில் தீபாவளிக்கு அரச விடுமுறை

அமெரிக்க மாநிலத்தில் தீபாவளிக்கு அரச விடுமுறை

0

அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலம் தீபாவளியை அதிகாரப்பூர்வ அரச விடுமுறையாக அறிவித்துள்ளது.

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் சட்டமூலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் கெவின் நியூசம் கையெழுத்திட்டுள்ளார்.

 இந்திய அமெரிக்கர்களின் மிகப் பெரிய மக்கள் தொகையை கலிபோர்னியா தீபாவளியை அதிகாரப்பூர்வமாக அரச விடுமுறையாக அறிவித்த மூன்றாவது மாநிலமாக மாறியுள்ளது.

பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை 

சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி அன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும்.

இந்த முக்கிய சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.

பன்முகத்தன்மை கொண்ட மாநிலம் 

கலிபோர்னியா சட்டமன்ற உறுப்பினர் ஆஷ் கல்ரா கருத்துத் தெரிவிக்கையில், கலிபோர்னியாவில் இந்திய அமெரிக்கர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், தீபாவளியை அதிகாரப்பூர்வ அரச விடுமுறையாக அறிவிப்பது, நமது பன்முகத்தன்மை கொண்ட மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு தீபாவளியை அறிமுகப்படுத்த உதவும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version