Home உலகம் இஸ்ரேல் தாக்குதலுக்கு அரபு லீக் அதிரடி ஆலோசனை: கூடிய அவசர கூட்டம்

இஸ்ரேல் தாக்குதலுக்கு அரபு லீக் அதிரடி ஆலோசனை: கூடிய அவசர கூட்டம்

0

இஸ்ரேலைக் (Israel) கண்டித்து கத்தாரில் (Qatar) அரபு – இஸ்லாமிய தலைவர்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்தாா் தலைநகா் தோஹாவில் இந்த அவசர கூட்டம் நடபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகின்றது.

வான்வழித் தாக்குதல் 

தோஹாவில் ஹமாஸ் தலைவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கண்டனத்தை ஈட்டித் தந்துள்ளது.

இதனைக் கண்டித்து, தோஹாவில் அரபு – இஸ்லாமிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தநிலையில், நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மத்திய கிழக்காசிய தலைவர்கள் பலர் தோஹாவுக்கு வருகை தந்துள்ளனர்.

கடும் நடவடிக்கை

அப்போது இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களை ஓரணியில் திரட்டும் இந்த ஆலோசனைக்கு முன்பாக, வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக தூதரக ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கடும் நடவடிக்கைகள் பாயுமா என்பதைக் குறித்து வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version