கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் பெறுமதி சுமார் 7 வீதத்தால் வலுவடைந்துள்ளமையால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததால் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 0.25 டிரில்லியன் ரூபா அல்லது சுமார் 25,000 கோடி ரூபாவால் குறையும் என பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் இறுதிவரை நாம் செலுத்த வேண்டிய மொத்தக் கடனின் பெறுமதி சுமார் 8 டிரில்லியன் ரூபாவாகும். அதில் 45 வீதம் நேரடி வெளிநாட்டுக் கடனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தொகை 3.65 டிரில்லியன் ரூபாயாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
இது தோராயமாக 7 சதவீதம் குறைக்கப்படும் போது, நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடனின் ரூபாய் மதிப்பு 3.40 டிரில்லியனாக குறைகிறது.
ரூபாவின் மதிப்பு
எதிர்காலத்தில் ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வலுவடையும் போது இந்தத் தொகை மேலும் குறையும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாயின் பெறுமதி ஆண்டின் தொடக்கத்தில் 360 ரூபாயாக இருந்த தொகை ஏப்ரல் இறுதிக்குள் 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சொகுசு வாகனங்களை பராமரிக்க முடியாமல் தவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆனால் நாம் செலுத்த வேண்டிய டொலர் தொகையில் ஒரு போதும் குறைவு ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |