Home உலகம் பீதியை கிளப்பிய புதிய வைரஸ்: சீனா வெளியிட்ட அறிவிப்பு

பீதியை கிளப்பிய புதிய வைரஸ்: சீனா வெளியிட்ட அறிவிப்பு

0

சீனாவில் (China) பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸை போன்ற ஹுயூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) சீனாவில் பரவி வருகின்ற நிலையில், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பத் தொடங்கியுள்ளன.

அவசர நிலை பிரகடனம்

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, சீனாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கொரோனா உள்ளிட்ட பல வைரஸ்களைக் கலந்து உருவாக்கப்பட்ட புதிய வைரஸ் என்று அச்சம் நிலவி வருகிறது.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் பீதி அடைய வேண்டியசீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும், பல நாடுகள் சீனாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு இப்போது அறிவித்துள்ளன.

வெளிநாட்டினருக்கு உத்தரவாதம்

எனினும், சீனாவுக்குச் செல்லும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, சீனாவில் பரவும் வைரஸ் குறித்து உலகம் முழுவதும் இப்போது உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version