Home உலகம் கனடா வானில் நிகழவிருக்கும் அதிசயம் : மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

கனடா வானில் நிகழவிருக்கும் அதிசயம் : மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

0

2025 மார்ச் 29 ஆம் திகதி அன்று வட அமெரிக்காவில் (North America) ஒரு பகுதி சூரிய கிரகணம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அட்லாண்டிக் கனடா (Canada) பகுதிகளில் இது சூரியன் உதயமாகும் நேரத்தில் காணக்கூடிய சிறப்பு நிகழ்வாக காணப்படும்.

இந்த பகுதி கிரகணத்தின் போது, சில பகுதிகளில் “இரட்டை சூரிய உதயம்” (Double Sunrise) என்ற அபூர்வமான நிகழ்வை பார்க்கலாம்.

வானில் அதிசய நிகழ்வு 

இதில், சூரியன் உதயமாகும் போது, மூன்றில் இரண்டு பகுதி நிலவால் மறைக்கப்படும்.இதனால், சில இடங்களில் “சூரிய கொம்புகள்” (Solar Horns)என அழைக்கப்படும் விசித்திரமான தோற்றம் உருவாகும்.

கனடாவில் Forestville மற்றும் Saint Andrews ஆகிய இரண்டு இடங்களில் இந்த அதிசய நிகழ்வைக் காணமுடியும். 

கிரகணத்தை மிகத் தெளிவாக காணக்கூடிய முக்கிய இடங்கள்

மேலும், பாதுகாப்பான சூரியக் கண்ணாடிகளை பயன்படுத்தி, கண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கிரகணத்தைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version