Home உலகம் டிராகனா, பாம்பா : இணையத்தில் வைரலாகும் காணொளி

டிராகனா, பாம்பா : இணையத்தில் வைரலாகும் காணொளி

0

டிராகனா அல்லது பாம்பா என்று பார்ப்பவர்களை குழப்பக்கூடிய வகையில் உயிரினம் ஒன்றின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றது.

டிராகன்கள் உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற விவாதம் காலங்காலமாக நடந்து வரும் விடயமாகவுள்ளது.

இந்த நிலையில், குறித்த உயிரினம் காண்போருக்கு குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் டிராகன் போன்ற தோற்றம் கொண்டதாக காணப்படுகின்றது.

குழப்பக்கூடிய உயிரினம்

அந்த காணொளியில், நீர் தொட்டி ஒன்றில் உடல் முழுதும் பச்சை வண்ணமாக உள்ள உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து டிராகனைப் போல காட்சியளிக்கின்றது.

இதனடிப்பையில் மேற்படி காணொளி தாய்லாந்தில் (Thailand) எடுக்கப்பட்டுள்ளதுடன் உண்மையில் அந்த உயிரினம் ஒரு தண்ணீர் பாம்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மற்றைய பாம்புகளை விட வித்தியாசமான முறையில் தோற்றம் கொண்ட இந்த டிராகன் இணையவாசிகளிடம் பல்வேறு விவாதங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version