Home உலகம் சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல் : 67 பேர் உயிரிழப்பு

சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல் : 67 பேர் உயிரிழப்பு

0

ஆபிரிக்கா (Africa) – சூடானில் (Sudan) மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 67பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வரும் அதிகார போராட்டம், நாட்டின் அமைதி மற்றும் பொது மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது.

இந்த உள்நாட்டுக் கலவரத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறனர்.

ஆளில்லா விமானம்

இந்நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் ஆளில்லா விமானம் நேற்று முன்தினம் (24.01.2025) தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 67 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மருத்துவமனை போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய இடத்தை தாக்குவது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும் இந்த கொடூர செயலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அத்துடன் மனிதாபிமான உதவிகளை வழங்கும் மருத்துவமனைகளைத் தாக்குவது போர் குற்றமாகும் என்று பல நாடுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/B8o_q2oxxvs

NO COMMENTS

Exit mobile version