பாகிஸ்தானில் (Pakistan) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஏழு குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் குறித்த தாக்குதல் நேற்று (28) நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் மாவட்டத் தலைநகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர சிகிச்சை
அங்கு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 13 வயது சிறுவன் உள்பட இரண்டு பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 15,18 மற்றும் 19 வயதுடைய மூன்று பேருக்கு பலத்த காயங்களும், மீதமுள்ளவர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தத் தாக்குதலானது, ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
