Home உலகம் வெளிநாடொன்றில் பற்றி எரிந்த பாரிய கட்டடம்: ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு

வெளிநாடொன்றில் பற்றி எரிந்த பாரிய கட்டடம்: ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு

0

துபாய் மெரினா பின்னாக்கிள் பகுதியில் உள்ள 67 மாடி குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மேல் மாடியில் ஏற்பட்ட தீ வேகமாக கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்பு படை விரைந்து சென்று தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டது.

உயிர் சேதம் 

764 குடியிருப்புகள் உள்ள அந்த கட்டிடத்தில் இருந்த சுமார் 3,820 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடிய நிலையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று துபாய் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

தற்காலிக வசதிகள்

அதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வசதிகள் வழங்குவதற்காக கட்டட அபிவிருத்தி அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும், மீட்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் உதவிகள் வழங்கப்படுகின்றன.

NO COMMENTS

Exit mobile version