பிலிப்பைன்ஸ் (Philippine Islands) கடற்கரையில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தாலும், பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9:59 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இது பிலிப்பைன்ஸ் தீவுகளின் கிழக்கே, ஆரம்ப மதிப்பீட்டின்படி 6.2 மைல்கள் (10 கிலோமீற்றர்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
Notable quake, preliminary info: M 6.3 – east of the Philippine Islands https://t.co/R9OZAlDWQk
— USGS Earthquakes (@USGS_Quakes) June 24, 2025
நிலநடுக்கத்தின் மையப்பகுதி, தாவோ மாகாணத்தின் பகுலின் நகரிலிருந்து சுமார் 232 மைல்கள் (374 கிலோமீற்றர்) தொலைவிலும், தாவோ நகரிலிருந்து சுமார் 300 மைல்கள் (483 கிலோமீற்றர்) தொலைவிலும் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ஹவாயில் உள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எந்தவொரு சுனாமி எச்சரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ வெளியிடவில்லை.
இந்த நில அதிர்வு சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக தெரிவிக்கப்படுவதுடன் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் குடியிருப்புகள் இல்லை என்பதால், உயிரிழப்பு வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Preliminary M6.5 #Earthquake
ID: #rs2025mhogyj
363km from #Baganga, #Philippines
2025-06-24 01:58 UTC
Source: #GFZ@raspishakeJoin the largest #CitizenScience EQ community ➡ https://t.co/Y5O0dgJqJF
EVENT ➡ https://t.co/abRXNTAOpw pic.twitter.com/IwjR5KpbXB
— Raspberry Shake Earthquake Channel (@raspishakEQ) June 24, 2025
