Home முக்கியச் செய்திகள் கொழும்பை உலுக்கிய இரட்டை படுகொலை: அடுத்தடுத்து சிக்கிய சந்தேகநபர்கள்!

கொழும்பை உலுக்கிய இரட்டை படுகொலை: அடுத்தடுத்து சிக்கிய சந்தேகநபர்கள்!

0

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (15) கிராண்ட்பாஸ், ஜாபோஸ் லேனில் இரு குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

கைது நடவடிக்கை

இதன்படி, கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று இரவு வெல்லம்பிட்டியில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

அத்தோடு, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 02 கத்திகள் மற்றும் ஒரு தொலைபேசியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version