தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானை அரசாங்கம் கைது செய்தது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் இன்று(19.04.2025) சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து
வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஆயுதப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய ஒருவரே கருணா. அவரது மிக முக்கிய சகாவாக
பிள்ளையான் இருந்தார்.
கிழக்கு மாகாணம்
ஆனையிறவு உட்பட 14 இராணுவ முகாம்களைச் சுமார் 4 நாட்களில் புலிகள் அழித்தனர்.
இந்த அனைத்து தாக்குதல்களையும் கருணாவே மேற்கொண்டார். கருணா அம்மானின்
மாற்றத்தினாலேயே கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகள் இழந்தனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா அம்மான் தொடர்ந்து இருந்திருந்தால்
இராணுவத்தினரால் ஒருபோதும் தொப்பிகலவை கைப்பற்றியிருக்க முடியாது. இந்திய
இராணுவம் கூட தொப்பிகலவுக்குச் செல்ல அஞ்சியது.
கருணா வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே தொப்பிகலவையும் கைப்பற்ற
முடிந்தது. கருணா மற்றும் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த பின்னரே
என்றுமே கைப்பற்றப்ப முடியாது எனத் தெரிவிக்கப்பட்ட தோராபோரா
மலையைக் கூட கைப்பற்ற முடிந்தது.
அது மாத்திரமின்றி கிழக்கு மாகாணம், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னரே விடுதலைப்
புலிகளுக்கான ஆயுதப் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் தாம் பாதுகாக்கப்படுவோம் என்று நம்பியே கருணாவும் பிள்ளையானும்
அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நண்பன்
அவ்வாறிருக்கையில் அரசு அவர்களைக் காட்டிக்
கொடுத்தால் அது நியாயமற்றது.
இதன் ஊடாக வடக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக தமிழ் மக்களின் வாக்குகளைப்
பெற்றுக்கொள்வதே அரசின் நோக்கமாகும்.
கருணா மற்றும் பிள்ளையான் கைது
செய்யப்படுவது புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகும்.
இதனை நோக்கமாகக் கொண்டே அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றது.
கருணா,
பிள்ளையான் கொல்லப்படும் நாளே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மிகவும்
மகிழ்ச்சியடையும் நாளாகும். கலாநிதி என்.எம்.பெரேரா கூறியதைப் போன்று இன்று
எதிரியின் எதிரி நண்பனாகியிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் எதிரி கருணா. கருணாவின் எதிரி புலம்பெயர்
ஈழத்தமிழர்கள். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நண்பன் ஜே.வி.பி. ஆகும். இது
வரலாற்றுப் பேரழிவுக்கு வழிவகுக்கும்”
