நிதி அமைச்சின் அதிகாரிகளை எதிர்வரும் 17ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான பண வெளியீடு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் பிரதி அடுத்த வாரம் வெளியிடப்படும்.
இதேவேளை, அதிபர் தேர்தல் கடமைகளுக்காக காவல்துறை பிரிவு மட்டத்தில் எதிர்பார்க்கப்படும் செலவுகள் அடங்கிய அறிக்கைகளை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் திட்டம் தொடர்பான ஒட்டுமொத்த செலவு மதிப்பீடு விரைவில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
வழங்கப்படவுள்ள பாதுகாப்பு
இதேவேளை, அதிபர் தேர்தல் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு அரசாங்க ஊடகப்பிரிவின் கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை தொகுதிக்குட்பட்ட பொறுப்பதிகாரிகளுக்கும் அரசாங்க ஊடக செயலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.