Home இலங்கை அரசியல் பொது விவாதத்தில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

பொது விவாதத்தில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

0

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (செப். 07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிகாரச்சி தெரிவித்துள்ளார்.

‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி பிற்பகல் 3.00 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

மாலை 5.00 மணி வரை நாளை முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாகவும்,  200 ற்கும் மேற்பட்ட சமூக ஊடக தளங்களிலும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவர்களின் கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என ரோஹன ஹெட்டிகாரச்சி கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள்

இதுவரை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, நாமல் ராஜபகச, திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹெட்டிகாரச்சி, அநுரகுமார திஸாநாயக்க உட்பட ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கூட்டங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்,

மேலும், ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது கடினம் என அவர் தரப்பினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நாளை பொது விவாதம் நடைபெறவுள்ளது.

Source: https://tamilwin.com/article/election-debate-presidential-candidates-tomorrow-1725609142

NO COMMENTS

Exit mobile version