Home உலகம் எலான் மஸ்கிற்கு நன்றி தெரிவித்த ரணில் – அறிமுகமானது அதிவேக இணைய சேவை

எலான் மஸ்கிற்கு நன்றி தெரிவித்த ரணில் – அறிமுகமானது அதிவேக இணைய சேவை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஸ்டார்லிங் இணைய சேவை உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்டார்லிங் இணைய சேவை தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவென்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பதிவில் மேலும் தெரிவிக்கையில், அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு வெற்றிப்படி

இது நமது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு வெற்றிப்படி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான முன்னேற்றங்கள் குறித்து ஆராய விரைவில் எலான் மஸ்கை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.   

ஸ்டார்லிங் இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்றும், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version