Home உலகம் ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிடத்தை அதிரடியாக மாற்றும் எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் தலைமையிடத்தை அதிரடியாக மாற்றும் எலான் மஸ்க்

0

முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் (Elon Musk)  தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் (Space Exploration Technologies Corp) மற்றும் எக்ஸ் (X) ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.

விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) ஆகியவை தற்போது அமெரிக்காவின் (United States) கலிபோர்னியா (California) மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ராக்கெட் சோதனை

இந்த நிலையில் எக்ஸ் -இல் அவர் அளித்த நேர்காணலில்  தனது இந்த 2 நிறுவனங்களின் தலைமையிடத்தை மற்றொரு அமெரிக்க மாகாணமான டெக்சாஸ் (Texas) மாகாணத்திற்கு மாற்ற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலங்களாக கொண்டுவரப்பட்ட வெவ்வேறு சட்டங்களாலும் குடும்பங்களும் நிறுவனங்களும் பெறும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதுவதால் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது கலிபோர்னியாவின் ஹாத்ரோன் (HAWTHRONE) பகுதியில் செயல்பட்டு வரும் இரு நிறுவனங்களும் டெக்சாஸில் உள்ள ராக்கெட் சோதனை தலமான ஸ்டார்பேஸ் Starbase பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version