கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் (Ukraine) – ரஷ்யா (Russia) போர் தற்போது முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் (United States) – வாஷிங்டன் (Washington) மாகாணத்தில் வைத்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மேற்கத்திய நாடுகள்
அதனடிப்படையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் அமெரிக்கா சென்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவை உக்ரைன் சமாளித்து வருகிறது.
மேலும் ரஷ்ய பகுதிகளில் நுழைந்தும் உக்ரைன் தாக்குதல்களும் நடத்தி வருகிறது.
இந்நிலையில் போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யா உடனான போர் அமைதிக்கு மிக அருகில் நெருங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே போரை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார உதவி
மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதிய ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்காவும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. சீனா (China), வடகொரியா (North Korea) உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.