Home உலகம் FreeStyle Libre குருதி சோதனை கருவியில் தவறு! ஐரோப்பிய, கனேடிய நீரிழிவு நோயாளர்களுக்கு எச்சரிக்கை

FreeStyle Libre குருதி சோதனை கருவியில் தவறு! ஐரோப்பிய, கனேடிய நீரிழிவு நோயாளர்களுக்கு எச்சரிக்கை

0

அமெரிக்காவை தளமாக கொண்ட அபோட் மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் இரு குருதிசோதனை குறிகாட்டிகள் 16 நாடுகளில் பல மரணங்களுக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக மீளெடுக்கப்படுகின்றன.

அதன்படி, பிறிஸ்ரைல் லிப்ரே (FreeStyle Libre3) மற்றும் பிறி ஸ்ரைல் 3 பிளஸ் (FreeStyle Libre 3 Plus) ஆகிய குருதிசோதனை குறிகாட்டிகளே இவ்வாறு  மீளெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை இந்த சாதனங்கள் செயலிழந்ததால் ஏழு மரணங்கள் ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஒஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் இந்த கருவிகள் மீளெடுப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

குருதிசோதனை கருவிகள் 

அதேபோல கனடாவிலும் குறித்த குருதிசோதனை கருவிகள் மீளெடுக்கப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 30 இலட்சம் குறைபாடுள்ள கருவிகள் மீளெடுக்கப்படுவதாக அபோட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் இந்த சாதனங்களில் சில உண்மையாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைவிட குறைந்த அளவில் தவறான அளவீடுகளை வழங்கியமை கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.

இதுவரை இந்த கருவியின் செயலிழப்பு குறித்த 736 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதில் 7 மரணங்களும் அடங்குகின்றதாக கூறப்படுகின்றது.

நீரிழிவு நோயின் மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் இந்த கருவிகள் குறித்த நோயாளியின் குருதியில் உள்ள சர்க்கையின் அளவை தொடர்ந்து கண்காணித்து, நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது ஹைப்பர் கிளைசீமியாவின் அபாயத்தைத் தடுக்க உதவுவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version