Home உலகம் இஸ்ரேல் – காசா போர் பதற்றம் : டெல் அவிவ் மீது அதிரடி காட்டிய ஹமாஸ்

இஸ்ரேல் – காசா போர் பதற்றம் : டெல் அவிவ் மீது அதிரடி காட்டிய ஹமாஸ்

0

காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) தாக்குதல் தீவிரமடைந்த நிலையில், டெல் அவிவ் (Tel Aviv-Yafo) மீது ஹமாஸ் (Hamas) ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து காசாவில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின்படி, சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் 504 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 190 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொக்கெட் தாக்குதல்

இந்நிலையில் இஸ்ரேலின் முக்கிய வணிக மையமான டெல் அவிவ் மீது நேற்று (20.03.2025) ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள பலஸ்தீனிய பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய “தாக்குதலுக்கு” பதிலடியாகவே டெல் அவிவ் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான எஸ்செடின் அல்-காஸம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காசாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணையை இடைமறித்ததாகவும், மற்ற இரண்டு மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/embed/LWdeWCfxtB4

NO COMMENTS

Exit mobile version