Home உலகம் அமெரிக்காவின் விசா கட்டுப்பாடு: சர்வதேச மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வு

அமெரிக்காவின் விசா கட்டுப்பாடு: சர்வதேச மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வு

0

சர்வதேச மாணவர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் செல்ல ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பல்கலையில் படிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு விசா கட்டுப்பாடுகளை விதித்து விண்ணப்பங்கள் வடிகட்டப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியேற்ற விதிகளை கடுமையாக்கி உள்ளார்.

மாணவர் விசா

அதன் ஒரு பகுதியாக மாணவர் விசாக்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் உள்நுழைகின்றார்கள்.

இதில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இந்த எண்ணிக்கை மூன்றாண்டுகளில் இல்லாத அளவு தற்போது சரிவை சந்தித்துள்ளது.

விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தரவுகளை விரிவாக ஆய்வு செய்வதால் விண்ணப்ப செயலாக்கத்திற்கு காலதாமதமாகின்றது.

போதிய காரணங்கள் 

அதன்பின், படிப்பு முடிந்தவுடன் சொந்த நாடு திரும்புவோம் என்பதை நிரூபிக்க போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி, பெரும்பாலான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதனால், அமெரிக்க பல்கலைகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 70 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால் இந்திய மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கு ஆலோசனை நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகம் பேர் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version