Home உலகம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன்! ஆரம்பமானது பேச்சுவார்த்தைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன்! ஆரம்பமானது பேச்சுவார்த்தைகள்

0

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

எனினும் அந்த பேச்சுவார்த்தை நிறைவேறுவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஸ்யா(Russia) தற்போது உக்ரைனையும் அதனுடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியில்
தாக்குதல் நடத்தி வருகிறது.

எனவே, இந்த தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக
உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தைகள்  ஆரம்பம்

இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் “இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி “புதிய அத்தியாயம்” எனத் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் “இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம்.

மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைனை தவிர மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளதுடன் துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version