Home முக்கியச் செய்திகள் சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி நகுலேஸ் வேட்புமனுவில் ஒப்பம்

சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி நகுலேஸ் வேட்புமனுவில் ஒப்பம்

0

மட்டக்களப்பு ( Batticaloa) மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 ற்கான வேட்புமனுவில் முன்னாள் போராளிகள் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கையொப்பமிட்டுள்ளார்.

இவர் இன்றையதினம் (9) வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வடகிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களுக்குமான வேட்புமனுக்களை இன்றைய தினம் கையளிக்கவுள்ளனர்.

வேட்புமனுவில் ஒப்பம்

இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் தங்கள் கையொப்பங்களை இட்டனர்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் முன்னாள் போராளியான என்.நகுலேஸ் இம்முறை தேர்தலில் புதுமுகமாகக் களமிறங்கும் முகமாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோவின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா முன்னிலையில் வேட்பு மனுவில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

Source: https://ibctamil.com/article/ex-fighter-nakules-files-for-dtna-symbol-1728465443?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version