Home இலங்கை சமூகம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி

0

Courtesy: தவசீலன்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினரால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது

முள்ளிவாய்க்கால் கிழக்கு இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் இந்த அகழ்வுப்பணி இடம்பெற்று வருகிறது.

அகழ்வுப் பணி

கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், அகழ்வுப்பணியானது கொழும்பில்
இருந்து வருகைதந்த பொலிஸ் மற்றும் விசேட பாதுகாப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/excavation-for-ltte-weapons-in-mullivaikal-1728428945

NO COMMENTS

Exit mobile version