Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற அவசர கூட்டத்திற்கு கோடி ரூபா செலவு!

நாடாளுமன்ற அவசர கூட்டத்திற்கு கோடி ரூபா செலவு!

0

நாடாளுமன்ற அவசர கூட்டத்தை நேற்றைய தினம் (2) நடத்துவதற்கு சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சிறிலங்கா அதிபரிடம் விசேட அறிக்கையொன்றை முன்வைப்பதற்காக நேற்றைய நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

அதன்போது, அதிபரின் உரையின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டு நாடாளுமன்ற ஒத்திவைக்கப்பட்டது.

செலவு

இந்த நிலையில், இந்த கூட்டம் நேற்று வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடைபெற்றது.

அதன் படி, கூட்டம் குறுகியதாக இருந்தாலும், பொதுவாக ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தின் ஒரு நாளுக்குச் செலவிடப்படும் தொகையே குறுகிய கூட்டங்களில் இருக்கும் என்று நாடாளுமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/expenditure-rs-1-crore-for-a-parliamentary-session-1720088116

NO COMMENTS

Exit mobile version