ரோமில் (Rome) உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விபத்து இன்றைய தினம் (04.07.2025) இடம்பெற்றுள்ளது.
மேலும், பாதுகாப்புப் படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
லாரி ஒன்று எரிவாயு குழாய் மீது மோதியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
https://www.youtube.com/embed/AKT_0kEw8FY
