Home உலகம் வெளிநாடொன்றில் பாரிய வெடிப்பு! 16 பேர் ஸ்தலத்திலேயே பலி

வெளிநாடொன்றில் பாரிய வெடிப்பு! 16 பேர் ஸ்தலத்திலேயே பலி

0

பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் குறித்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 25க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் திடீரென வெடித்துள்ளது.

வெடிப்புக்கான காரணம் 

வெடி விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Image Credit: BSS

அதன்போது, 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 7 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொதிகலன் வெடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றதுடன், தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version