Home உலகம் பிரித்தானியாவை அச்சுறுத்தும் கடும் குளிர்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவை அச்சுறுத்தும் கடும் குளிர்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பிரித்தானியாவில் (United Kingdom) கடுமையான குளிரான காலநிலை தொடர்பில் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி (13.09.2024) பிரித்தானியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 0°C க்கும் கீழே குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லண்டன் (London), மான்செஸ்டர் (Manchester), பார்ட் மற்றும் பிரிஸ்டல் (Bristol) ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பநிலை குறைவடைவாதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பிரச்சினை

இந்த வானிலை பிரித்தானியாவில் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கும் என பிரித்தானியாவின் பிற வானிலை ஆய்வுக்கூடங்கள் எதிர்வு கூறியுள்ளன.

மேலும், அரசு மற்றும் ஆட்சி அமைப்புகள் அவசர அணுகுமுறை திட்டங்களை உருவாக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான காலநிலையில் போது தொடருந்துகள் மற்றும் பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்துக்கள் தாமதமடையலாம் அல்லது நிறுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அரசின் அறிவுரைகளை பின்பற்றுமாறு பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version