Home உலகம் ஜப்பானில் விழுந்த விண்கல் – இரவில் நகரமே பகலான அதிசய தருணம்

ஜப்பானில் விழுந்த விண்கல் – இரவில் நகரமே பகலான அதிசய தருணம்

0

ஜப்பானின் (Japan) ககோஷிமா மாகாணத்தில் உள்ள சகுராஜிமா எரிமலை மீது ஒரு விண்கல் ஒன்று விழுந்துள்ளது.

இந்த அரிய நிகழ்வு, ககோஷிமா நகரவாசிகளையும், உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

விண்கல் விழுந்த சில நொடிகள், நகரத்தின் வானம் பிரகாசமான ஒளியில் மின்னி, இரவு பகலாக மாறியதை காட்சி காணொளிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

வானத்தை ஒளிர வைக்கும் காட்சி

சகுராஜிமா, ஜப்பானின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும். 

ககோஷிமா வளைகுடாவில், நகரத்துக்கு வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த எரிமலை, கிட்டத்தட்ட தினமும் சிறு சிறு வெடிப்புகளை உருவாக்கி, புகை, சாம்பல் எல்லாம் வானத்தில் பரவ விடுகிறது. 

இந்த எரிமலை மீது நேற்று இரவு 9:30 மணி அளவில் (ஜப்பான் நேரப்படி) ஒரு விண்கல் வந்து விழுந்துள்ளது.

வானத்தை ஒளிர வைக்கும் இந்த காட்சி, நகரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

NO COMMENTS

Exit mobile version