இலங்கையரான ஜொஹான் பீரிஸ் (Johann Peries) அந்தாட்டிக்காவில் (Antarctica) உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
அவர் 4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உலகின் மிக உயரமான நான்கு சிகரங்கள்
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில், ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
Johann Peries becomes the first Sri Lankan to summit Antarctica’s highest mountain🏔️
Congratulations 🇱🇰
Johann Peries has reached the summit of Mount Vinson, the highest mountain in Antarctica at 4,892 metres, to become the first Sri Lankan and one of the few islanders in the… pic.twitter.com/qs2Z4HqZla— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) January 28, 2025
இன்றுவரை, அவர் உலகின் மிக உயரமான நான்கு சிகரங்களான அவுஸ்திரேலியாவில் உள்ள கொஸ்கியஸ்கோ மலை, ஆபிரிக்காவில் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்ப்ரஸ் சிகரம் மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் போன்றவற்றில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
