Home இலங்கை அரசியல் நாமல் விடுத்த சவால்: அநுர அரசாங்கம் ஏன் தயங்குகின்றது..!

நாமல் விடுத்த சவால்: அநுர அரசாங்கம் ஏன் தயங்குகின்றது..!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சரியான ஆதாரங்களுடன் எங்களை முடிந்தால் கைது செய்யுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திடம் பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார். 

நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்சவின் சகோதரர் யோஷித ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, நீதிமன்ற வளாகத்தில், கருத்து தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ச, அநுர குமார அரசாங்கம், வழக்குகளை ஜோடித்து சாட்சியங்களை உருவாக்கி பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார். 

அதேவேளை, யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்த விதமானது, பொதுவாக சாதாரண மக்களை கைது செய்யும் விதத்தை விட பாரபட்சமான வகையில் இருந்ததாகவும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், தங்களை கைது செய்யுமாறு நாமல் ராஜபக்ச, பகிரங்கமாக தெரிவித்துள்ள போதிலும் அது தொடர்பில், அநுர அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் ஏன் இன்னும் எடுக்கவில்லை என கேள்வி எழுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது சிவில், சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜுகாந்த் உடனான நேருக்கு நேர் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version