Home உலகம் வெளிநாடான்றில் புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை

வெளிநாடான்றில் புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாங்க தடை

0

அவுஸ்திரேலியாவில்(Australia) வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை

அதன்படி, சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் வருகிற 2027ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு இந்த தடை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version