பிரிட்டன் முன்னாள் பிரதமா் பொறிஸ் ஜோன்ஸன்(boris jonhson) தனது 60 ஆவது வயதில் ஒன்பதாவது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.
பொறிஸ் ஜோன்ஸன் – முன்னாள் மனைவி மரினா வீலருக்கு நான்கு குழந்தைகளும், காதலி ஹெலன் மெசின்டைருடன் ஒரு குழந்தையும் உள்ள நிலையில், தற்போது, தன்னுடைய 60ஆவது வயதில் ஒன்பதாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
ஏற்கனவே 3 குழந்தைகள்
பொறிஸ் ஜோன்ஸன் – கெர்ரி திருமணம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது குழந்தை பிறந்துள்ளது.
பிரிட்டன் முன்னாள் பிரதமா் பொறிஸ் ஜோன்ஸனின் மனைவி கேர்ரி ஜோன்ஸன் கருவுற்றிருந்த நிலையில் மே 21ஆம் திகதி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு பாப்பி எலிஸா ஜோஸபைன் ஜோன்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது
என்னால் நம்பவே முடியவில்லை
இது குறித்து பொறிஸ் ஜோன்ஸன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த உலகுக்கு பாப்பி எலிஸா ஜோஸபின் ஜோன்சனை வரவேற்கிறேன், நீ இவ்வளவு அழகாக, குட்டியாக இருப்பதைப் பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை. இந்த உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று பதிவிட்டு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
எங்கள் கூட்டத்தின் கடைக்குட்டி என்று கெர்ரி ஜோன்ஸன் குறிப்பிட்டுள்ளார்.