Home உலகம் வைத்தியசாலை கட்டத்தில் மோதி வீழ்ந்தது உலங்கு வானூர்தி : வைத்தியர் உட்பட நால்வர் பலி

வைத்தியசாலை கட்டத்தில் மோதி வீழ்ந்தது உலங்கு வானூர்தி : வைத்தியர் உட்பட நால்வர் பலி

0

துருக்கியில் (turkey)இன்று (23) ஞாயிற்றுக்கிழமை உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

உலங்கு வானூர்தி மருத்துவமனை கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி வைத்தியசாலை தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது எனவும், விபத்தில் இரண்டு விமானிகள், வைத்தியர் மற்றும் மற்றுமொரு ஊழியர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கு காரணம்

பனிமூட்டமான காலநிலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் தென்மேற்கு இஸ்பார்டா மாகாணத்தில் இராணுவப் பயிற்சியின் போது இரண்டு உலங்கு வானூர்திகள் மோதியதில் 6 வீரர்கள் உயிரிழந்த இரண்டு வாரங்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version