Home உலகம் பிரான்ஸுக்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் !

பிரான்ஸுக்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் !

0

பிரான்சஸின் (France) புதிய பிரதமராக பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை (Michel Barnier) ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) நியமித்துள்ளார்.

குறித்த விடயமானது எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 73 வயதான மைக்கேல் பார்னியர் 2016 தொடக்கம் 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா (Britain) வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

மூத்த உறுப்பினர்

மைக்கேல் பார்னியர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவர் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version