Home உலகம் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முக்கிய நாடு – வெளியான அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முக்கிய நாடு – வெளியான அறிவிப்பு

0

பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் இந்த முடிவுக்கு  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்

x பதிவில் இமானுவேல் தெரிவித்துள்ளதாவது,

மத்திய கிழக்கில் அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்.

வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிடுவேன்.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இன்றைய அவசர முன்னுரிமை. அமைதி சாத்தியம்.

உடனடி போர்நிறுத்தம்

உடனடி போர்நிறுத்தம் செய்து, அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை.

பாலஸ்தீன அரசை வலுப்படுத்த வேண்டும்.

அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். வேறு வழியில்லை. பிரான்ஸ் மக்கள் மத்திய கிழக்கில் அமைதியை விரும்புகிறார்கள். நாம் அமைதியை அடைவோம் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version