Home உலகம் மண்ணக தூதர் பிரான்சிஸின் விண்ணகப் பயணம் – நேரலை

மண்ணக தூதர் பிரான்சிஸின் விண்ணகப் பயணம் – நேரலை

0

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இலங்கை நேரப்படி இன்று (26.04.2025) மதியம் 1.30 மணியளவில் வத்திக்கான் (Vatican) நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் ஆரம்பமானது.

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸின் (Pope Francis) மறைவு உலகளாவிய ரீதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் மதத் தலைவர் மட்டும் அல்ல அவர் ஒரு மிக முக்கியமான உலக அளவிலான மனித உரிமை, சமாதான தூதராகவும் பார்க்கப்படுகிறார்.

உலகளவில் அறியப்பட்ட பரிசுத்த பாப்பரசர் 88 வயதில் நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு கடந்த 21ஆம் உயிர்நித்தார்.

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி கிரியைகளை கீழ் உள்ள இணைப்பில் மூலம் நேரலையாக காண்க.

https://www.youtube.com/embed/J6MqpK91bEA

NO COMMENTS

Exit mobile version