கனடாவில் (Canada) உள்ள இரண்டு ஊடகங்களினால் எந்தவொரு ஆதாரமும் இன்றி கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நீதியமைச்சராக இருந்த கரிஆனந்தசங்கரி தற்போது கனடாவின் பொதுப் பாதுகாப்பு துறை அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கனடாவில் ஈழத்தமிழர் ஒருவர் முக்கிய பதவியொன்றை வகிப்பதை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது.
அதனால் இதன் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.
இந்தநிலையில், கரி ஆனந்த சங்கரியை இலக்கு வைத்தது யார்? அதன் பின்னணியில் இலங்கை அரசு இருக்கின்றதா? என்று ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…
https://www.youtube.com/embed/JafaVX3od8M
