Home இலங்கை பொருளாதாரம் எரிவாயு கொள்வனவில் குளறுபடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

எரிவாயு கொள்வனவில் குளறுபடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

0

அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த விலைக்கு எரிவாயு வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விலைமனு கோரலை இரத்து செய்து அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கொள்வனவின் மூலமாக அரசாங்கத்திற்கு சுமார் 114 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரானை தாக்க முயலும் இஸ்ரேல்! பதிலடியை ஊகித்த பிரித்தானியா

விலைமனு கோரல்

சியாம் காஸ் டிரேடிங் என்ற நிறுவனம் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்கு சமர்ப்பித்த விலைமனு கோரலுக்கு கொள்முதல் மற்றும் மதிப்பீட்டுக் குழுக்கள் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், அந்த விலைமனு கோரல் ரத்து செய்யப்பட்டு, ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடிமக்கள் படை விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஓமான் வர்த்தக நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு எரிவாயு வாங்கியதன் மூலம் விலைமனு கோரல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் அமைப்புகளின் சங்கத்தின் தலைவர் கமந்த துஷார செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
 

ஊடகத் துறையில் பணியாற்ற ஐ.பி.சி தமிழ் வழங்கும் அரியவாய்ப்பு!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version