Home உலகம் தொடரும் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: முக்கிய கட்டத்தை எட்டியுள்ள போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை!

தொடரும் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: முக்கிய கட்டத்தை எட்டியுள்ள போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை!

0

காசாவில் (Gaza) 40,000 பலஸ்தீனியர்கள் கொன்றுக் குவிக்கப்பட்டுள்ள நிலையில்,  போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடுநிலை பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக கத்தார் (Qatar) பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Mohammed bin Abdulrahman Al Thani) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ஈரானிய தற்காலிக வெளிவிவகார அமைச்சர் அலி பகேரி கனியிடம் (Ali Bagheri Kan, போர் நிறுத்த பேச்சுவார்த்தை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்கள் குறித்து இன்று (16) கலந்துரையாடியுள்ளதாகவும் கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஈரானின் தற்காலிக வெளிவிவகார அமைச்சர், பலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை  நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

சியோனிச ஆட்சி

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஈரானிய  தற்காலிக வெளிவிவகார அமைச்சர், காசாவில் சியோனிச ஆட்சியின் குற்றங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடியுள்தாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், காசாவில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் கத்தாரின் தலைநகர் தோஹாவில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்தும் விவாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி (David Lammy), தனது பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிய சகாக்களுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கலந்துரையாட ஜெருசலேமில் இன்று (16) சந்திக்கவிருந்ததாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version