Home உலகம் காசாவில் மனிதாபிமான அமைப்புகள் எதிர்கொண்டுள்ள சிரமம்!

காசாவில் மனிதாபிமான அமைப்புகள் எதிர்கொண்டுள்ள சிரமம்!

0

காசாவில் (Gaza) உள்ள மனிதாபிமான அமைப்புகள் அங்குள்ள மக்களுக்கான உதவிப் பொருட்களைப் பெறுவதில் கடும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தை, இனாரா என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அர்வா டாமன் (Arwa Damon) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  உதவிப்பொருட்கள் கிடைக்கப்பெற்றாளும், அவைகளை தேவைகள் அதிகமாக காணப்படுகின்ற இடங்களுக்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற ஒன்றாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவசர சிகிச்கை

குறிப்பாக,  அல்அக்சா மார்ட்டியர்ஸ் (Al-Aqsa Martyrs Hospital) மருத்துவமனை அடிப்படை மருத்துவப் பொருட்களான காயத்திற்கு பயன்படுத்தும் கட்டுகள் போன்றவற்றில் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் இதனால் காயங்களுக் அவசர சிகிச்கை மற்றும் முதலுதவிகள் செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், நோயளிகளின் நிலைமைகளை எழுத தேவையான ஆவணங்களை பெறுவதிலும் சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version