Home உலகம் பாலஸ்தீன மக்களை சொந்த நாட்டிலிருந்து துரத்தும் ட்ரம்பின் திட்டம் அம்பலம்

பாலஸ்தீன மக்களை சொந்த நாட்டிலிருந்து துரத்தும் ட்ரம்பின் திட்டம் அம்பலம்

0

பாலஸ்தீன மக்களை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் அழைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க(us) ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) பேசியுள்ளது அம் மக்களுக்கு மட்டுமல்லாது அரபு உலகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த போரில் தற்போது அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், போர் காரணமாக காசாவில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

காசாவை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்

இந்நிலையில் தற்போதைய காசாவின் நிலை குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “காசா இப்போது பாதிக்கப்பட்ட இடமாக உள்ளது. காசாவை நாம் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அங்கே எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும்.

வேறு நாடுகளில் குடியேற்றம்

எனவே நாம் சில அரபு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு வேறு இடத்தில் (வேறு நாட்டில்) வீடுகள் அமைத்து தருவதே சரியாக இருக்கும்” என பேசியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் எஞ்சியுள்ள மீத இடங்களையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் இஸ்ரேல் உள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த பேச்சு இஸ்ரேலின் திட்டத்திற்கு மறைமுக ஆதரவு அளிக்கும் விதமாக உள்ளதாக அரபு நாடுகள் தமது கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்துள்ளன.  

NO COMMENTS

Exit mobile version