Home உலகம் காஸாவில் இனப்படுகொலை: கனடா பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

காஸாவில் இனப்படுகொலை: கனடா பிரதமருக்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

0

காஸாவில்(gaza) இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா (canada)பிரதமா் மாா்க் காா்னிக்கு(mark carney) இஸ்ரேல்(israel) பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin nethanyahu)கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனடா எப்போதுமே நாகரிக உலகுக்கே ஆதரவு அளித்துவந்தது. அதைத்தான் அந்த நாட்டின் தற்போதைய பிரதமா் மாா்க் காா்னியும் பின்பற்ற வேண்டும்.

வாா்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும்

ஆனால், ‘காட்டுமிராண்டிகளான’ ஹமாஸுடன் போரிட்டுவரும் ஜனநாயக நாடான, உலகின் ஒரே யூத தேசமான இஸ்ரேலை அவா் விமா்சிக்கிறாா். அவா் தனது வாா்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்தப் பதிவில் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, கனடாவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தின்போது இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஒருவா், ‘காஸாவில் இனப் படுகொலை நடைபெறுகிறது’ என்றாா். அதற்கு, ‘அது எனக்கும் தெரியும்; அதனால்தான் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி தடை விதித்துள்ளோம்’ என்று காா்னி பதிலளித்தாா்.

பல்டியடித்த மார்க் கார்னி

இதனை கூட்டம் ஆரவாரத்துடன் வரவேற்றது.

இந்த விவகாரம் சா்ச்சைக்குள்ளானதைத் தொடா்ந்து, ‘கூட்டத்தில் இருந்தவா் கூறியது எனக்குக் கேட்கவில்லை. இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி தடை இருக்கும் உண்மை நிலவரத்தைத்தான் சொன்னேன்’ என்று கூறி மாா்க் காா்னி சமாளிக்க முயன்றாா்.

இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாத நெதன்யாகு, மேடையில் கூறிய வாா்த்தைகளை மாா்க் காா்னி திரும்பப் பெற வேண்டும் என்று தற்போது வலியுறுத்தியுள்ளாா்.

NO COMMENTS

Exit mobile version