Home இலங்கை கல்வி உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பரீட்சை திகதியை பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

அந்தவகையில் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19-06-2026) வெளியாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி, பரீட்சைக்கு தோற்றிய 451,463 பரீட்சார்த்திகளில் 11,790 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதுடன் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர்.

இவர்களில் 11,651 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்பதுடன், 139 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவர். இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 7,419 பேர் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/gce-al-information-technology-examination-date-1781932138

NO COMMENTS

Exit mobile version