Home இலங்கை அரசியல் 2024 பொதுத் தேர்தல் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

2024 பொதுத் தேர்தல் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

0

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு(election comission) தெரிவித்துள்ளது. 

 தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில்74 நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் 

ஏதேனும் அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் .

திகாமடுல்ல(ampara) தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும்.

மொனராகலை மற்றும் பொலன்னறுவை(polonnaruwa) தேர்தல் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் போட்டியிடுவதுடன், அங்கு தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.

விருப்பு வாக்கு இலக்கங்கள்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.

எதிர்காலத்தில் விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version