Home உலகம் ஜெர்மனியில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த பிரித்தானியர்கள்

ஜெர்மனியில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த பிரித்தானியர்கள்

0

ஜெர்மனியில் (Germany) நடந்த சாலை விபத்தில் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் நான்கு பேர் உயிரிழந்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஜெர்மனியின் ஹெஸ்ஸி (Hesse) மாகாணத்தில் உள்ள காசல்(Kassel) பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.

சுற்றுலாப் பயணிகள்

இந்த கார் விபத்தில் இரண்டு தம்பதிகள் உட்பட நான்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த கார் விபத்து சம்பவத்தில், சாலையில் இருந்து கார் விலகி சென்று 30மீ தொலைவில் உள்ள மரத்தில் மோதியது.

இதையடுத்து, விபத்தில் சிக்கியவர்களில் ஒருவருடைய தொலைபேசியிலிருந்து இருந்து தானாக அவசர சேவைகளுக்கு அழைப்பு சென்றுள்ளது.

அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் பிற அவசர சேவைகள் பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுள்ளனர். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version