Home உலகம் ஜெர்மனி தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி

ஜெர்மனி தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி

0

ஜெர்மனியில் (Germany) நடந்த தேர்தலில் எதிர்க்கட்சியான கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz’s) ஜேர்மனியின் அடுத்த சான்சலர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஒரு அரசாங்கத்தை அமைக்கத் தயாராகும் போது, ​​ஐரோப்பாவிற்கு அமெரிக்காவிலிருந்து “உண்மையான சுதந்திரத்தை” வழங்க உதவுவதாகவும் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

பதவியில் அனுபவம் இல்லாத நிலை

ஜெர்மனியில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், அதன் சமூகம் இடம்பெயர்வு காரணமாக பிளவுபட்டு, அதன் பாதுகாப்பு மோதலில் ஈடுபடும் அமெரிக்காவிற்கும் உறுதியான ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையில் சிக்கியுள்ள நிலையில், மெர்ஸ், முன்னர் பதவியில் அனுபவம் இல்லாத நிலையில், ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

நேற்று (23) நடைபெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி

ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருந்தது

கடந்த ஆண்டு நவம்பரில் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவரான நிதி அமைச்சரை சான்சலர் ஒலாப் ஸ்கால்ஸ் திடீர் பதவி நீக்கம் செய்தார்.

இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/ts75h4hd9qk

NO COMMENTS

Exit mobile version