Home உலகம் ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாப்பு செலவுகளை கடுமையாக உயர்த்திய முக்கிய நாடு

ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாப்பு செலவுகளை கடுமையாக உயர்த்திய முக்கிய நாடு

0

ஜேர்மனி (Germany) பாதுகாப்பு செலவினங்களை வேகமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், 2029 ஆம் ஆண்டுக்குள் தனது பாதுகாப்பு செலவுகளை 95 பில்லியன் யூரோவிலிருந்து 162 பில்லியன் யூரோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் புதிய பட்ஜெட் திட்டங்களை நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெயில் வெளியிட்டுள்ளார்.

ஆயுதப்படை 

ரஷ்யாவின் (Russia) மீண்டும் ஆயுதப்படை திரட்டும் முயற்சிக்கு எதிராக நாங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செலவில் வருடத்திற்கு 8.5 பில்லியன் யூரோ உக்ரைனுக்கான (Ukraine) இராணுவ உதவியில் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் 2025 இல் 2.4 சதவீதமாக இருந்த ஜேர்மனியின் பாதுகாப்பு செலவு, 2029 இல் 3.5 சதவீத GDP-ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version