Home உலகம் முதல்முறையாக டிரில்லியன் டொலரை தாண்டும் உலக வர்த்தகம்!

முதல்முறையாக டிரில்லியன் டொலரை தாண்டும் உலக வர்த்தகம்!

0

இந்தாண்டு இறுதிக்குள் உலக வர்த்தகம் முதல்முறையாக 35 டிரில்லியன் டொலரை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்கா நாடு

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2025ம் ஆண்டில் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளே உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவின் இறக்குமதி வலுவாக இருந்த போதும் சீனாவின் இறக்குமதி பின்னடைவை சந்தித்துள்ளது.

தற்போதைய கணிப்புகள் அப்படியே தொடர்ந்தால் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக வர்த்தகம் 35 டிரில்லியன் டொலரை தாண்டும்.

இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது சுமார் ஏழு சதவீதம் அதிகமாகும், இதில் சரக்கு வர்த்தகம் மட்டும் கடந்த ஆண்டை காட்டிலும் ஆறு சதவீதம் (1.5 டிரில்லியன் டொலர்) பங்களிப்பை கொடுத்துள்ளது.

வணிகச் செலவுகள் 

போர்கள், சர்வதேச அரசியல் நெருக்கடிகள், அதிகரித்த செலவுகள் மற்றும் உலகளவில் நிலவிய சீரற்ற தேவை உள்ளிட்ட காரணங்கள், வர்த்தக வளர்ச்சியின் வேகத்தை பாதித்த நிலையிலும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வர்த்தம் தொடர்ந்து விரிவடைந்துள்ளது.

2025 அம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் ஏப்ரல் – ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருப்பினும், அடுத்த ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தக வளர்ச்சி நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றது.

மெதுவான உலகளாவிய பொருளாதார செயல்பாடு, அதிகரித்த கடன் மற்றும் வணிகச் செலவுகள் போன்ற காரணங்களால், வர்த்தக செயல்திறனை பாதிக்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version