அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் மற்றும் எட்டு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் மேற்கொண்டிருந்த மூன்று நாள் சுற்றுப்பயணம் நிறைவடைந்துள்ளது.
மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழு உருவ சிலையை அவர் திறந்நு வைத்துள்ளார்.
இதையடுத்து, சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிருந்து சிறிது நேரத்தில் வெளியேறியுள்ளார்.
சுற்றுப்பயணம்
அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடியுள்ளார்.
இதனையடுத்து, இரண்டாவது நாள் பயணமாக அவர் மும்பை சென்றுள்ளார்.
இதன்போது, மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டுள்ள நிலையில், இதனையடுத்து மெஸ்ஸி மூன்றாவது நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்
மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து, மாலை நான்கு மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் பத்தாவது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்துள்ளார்.
மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களின் பயணம் முடிவடைந்து அவர்கள் புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
