Home உலகம் அதிர வைக்கும் தங்கத்தின் விலை…! அமெரிக்கா – சீனா உச்சக்கட்ட மோதல்

அதிர வைக்கும் தங்கத்தின் விலை…! அமெரிக்கா – சீனா உச்சக்கட்ட மோதல்

0

அமெரிக்கா – சீனா (China) இடையிலான வர்த்தக மோதல்கள் உலகளாவிய வர்த்தகத்தில் பாரிய தாக்கத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக சந்தையில் (world market) தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,235 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை

உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட 10% சரிவு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் டொலரின் மதிப்பு சரிவு ஆகியவையும் தங்கத்தின் தேவையை அதிகரித்துள்ளன.

மேலும், சீனா, இந்தியா உள்ளிட்ட மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் 2024-ல் 1,000 மெட்ரிக் தொன்களைத் தாண்டியதால், விலை உயர்வுக்கு வலுவான அடித்தளம் அமைந்துள்ளது.

ஜனவரியில் 2,796 டொலர்களாக இருந்த தங்கத்தின் விலை, பெப்ரவரியில் 2,900 டொலர்களையும், மார்ச்சில் 3,128 டொலர்களையும் தாண்டியது. ஏப்ரல் 12-ல் 3,200 டொலர்களை உடைத்து, தற்போது 3,235 டொலர்களை எட்டியுள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2025 இறுதிக்குள் தங்கம் 3,300 டொலர்களை எட்டும் எனவும், பேங்க் ஆஃப் அமெரிக்கா 2026-ல் 3,350 டொலர்களை எட்டும் எனவும் கணிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version